'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) 'இது யார்?' என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானி என்றேன்" என உம்முஹானி(ரலி) அறிவித்தார்.குளித்தல்
'அய்யூப்(அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள். உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து 'அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?' எனக் கேட்டான். அதற்கு 'உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான்; எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லை' என அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்" என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.குளித்தல்
குளித்தல்
குளித்தல்
'எங்களில் எவருக்குக் குளிப்புக் கடமையானாலும் மூன்று முறை இரண்டு கைகளால் தண்ணீர் எடுத்துத் தலையின் மீது ஊற்றுவோம். பின்னர், கையால் தண்ணீரை அள்ளி வலப்பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் எடுத்து இடப்பக்கம் ஊற்றுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
குளித்தல்
'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து ஓர் ஆடையால் திரையிட்டேன். அவர்கள் தண்ணீரைத் தங்களின் கைகளில் ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்லத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் குழுவினார்கள். வாய்க் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையிலும் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அதை வாங்கவில்லை. தங்களின் கைகளால் தண்ணீரை வழித்துவிட்டுச் சென்றார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
குளித்தல்
'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்தால் எங்களைப் பார்த்து 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்" என அபூ ஹுiரா(ரலி) அறிவித்தார்.
குளித்தல்
'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கையால் தண்ணீரைத் தங்களின் இடக்கையில் ஊற்றி இருமுறையோ, மும்முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றி உடம்பைக் கழுவினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள் நான் அவர்களிடம் துவாலையை; கொடுத்தேன். அவர்கள் அதை விரும்பாமல் தங்களின் கைகளால் தண்ணீரை வழித்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.குளித்தல்
குளித்தல்
'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.குளித்தல்

