தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஸைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளிருந்துவிட்டு வெளியே வந்தனர். முதல் நபராக அவர்களைப் பின்தொடர்ந்து சென்று நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதனர்?' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'முதலிலுள்ள இரண்டு தூண்களுக்கு இடையில்' என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள்.


தொழுகை

அனஸ்(ரலி) அறிவித்தார்.
மஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல் நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரண்டு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள்.


தொழுகை

யஸீத் இப்னு ஆபீ உபைத் கூறினார்.
நான் ஸலமா பனீ அல் அக்வஃ(ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவர்களாக இருந்தேன். ஸலமா(ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணை தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள்.


தொழுகை

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் புறப்பட்டு, தமக்கு முன்னால் கைத்தடியைத் தடுப்பாக வைத்து 'பத்ஹா' என்ற இடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். (தொழுகைக்காக) அவர்கள் உளூச் செய்தபோது அவர்களின் மீதும் வைத்த தண்ணீரை மக்கள் (தம்மேனியில்) தடவினார்கள்.


தொழுகை

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் மற்றொரு சிறுவரும் கைத்தடியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள் தம் தேவையை முடித்ததும் (உளூச் செய்வதற்காக) தண்ணீர் ஊற்றுவோம்.

தொழுகை

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்தனர். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. உளூச் செய்து எங்களுக்கு லுஹரையும் அஸரையும் தொழுகை நடத்தினார்கள். அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று இருந்தது. அந்தக் கைத்தடிக்கு முன்னால் பெண்களும் கழுதைகளும் சென்று கொண்டிருந்தனர்.

தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக ஈட்டி நாட்டப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.


தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக ஈட்டி நாட்டப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.


தொழுகை

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.


தொழுகை

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'பத்ஹா' எனுமிடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுகை நடத்தினார்கள்.. அவ்hகளுக்கு முன்பு கைத்தடி ஒன்றுஇருந்தது. அதற்கு முனனால் கழுதையும் பெண்களும் நடப்பவர்களாக இருந்தனர்.


தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால்தான் (நம்முடைய) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.


தொழுகை

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'மினா' எனுமிடத்தில் சுவர் (போன்ற தடுப்பு) எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது பெட்டைக் கழுதையின் மீது ஏறிக் கொண்டு அங்கே வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் பருவ வயதை நெருங்கி இருந்தேன். மேய்வதற்காகக் கழுதையை அவிழ்த்துவிட்டுவிட்டு ஸஃபுக்கு முன்னே நடந்து சென்று வரிசையில் சேர்ந்து கொண்டேன். இதனை எவரும் ஆட்சேபிக்க வில்லை.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் ஒரு கணவாயிலும் தொழுதிருக்கிறார்கள். உயரமான மலைக்கும் அதன் அரும்லுள்ள மற்றொரு மலைக்கும் இடைப்பட்ட அந்தக் கணவாய் கஅபாவுக்கு நேராக அமைந்திருக்கும். தற்போது அங்குள்ள பள்ளிவாசல் இருக்கும் மேட்டைத் தம் இடது புறமாக ஆக்கி, அந்தப் பள்ளியிலிருந்து பத்து முழ தூரத்திலுள்ள கறுப்பு மேட்டில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.
(குறிப்பு: இந்தப் பாடத்திலுள்ள பத்து ஹதீஸ்களையும் சில பேர் ஒரு ஹதீஸாகக் கணக்கிட்டுள்ளதால் எண்களில் வித்தியாசம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.)

தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் 'தூத்துவா' என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் ஸுபுஹ் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் தொழத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மேல் அமைந்துள்ளது. அது, தற்போது பள்ளிவசால் காட்டப்பட்டுள்ள இடமன்று, அது அந்தப் பள்ளிக்குக் கீழ்ப்புறமாக அமைந்த இடமாகும்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'மர்ருள்ளஹ்ரான்' எனும் இடத்திற்கரும்லுள்ள ஓடையில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை (மக்காவிலிருந்து) மதீனா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லுமபோது 'ஸப்ராவாத்' என்ற இடத்தைக் கடந்ததும் சாலையின் இடப்புறம் அது உள்ளது. அந்தச் சாலைக்கும் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறிய இடத்திற்கும் ஒரு கல்லெறியும் தூரமே உண்டு' என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'ஹர்ஷா' எனும் மலைக்கருகில் (மதீனாவிலிருந்து செல்லும்) பாதையின் இடப்புறம் அமைந்த (ஓடையின் அரும்லுள்ள) மரங்களின் கீழ் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை 'ஹர்ஷா' எனும் மலையை ஒட்டிச் செல்கிறது. அந்த மலைக்கும் நபி(ஸல்) தங்கிய இடத்திற்குமிடையே அம்பு எய்தால் எவ்வளவு தூரமிருக்கும். இப்னு உமர்(ரலி) அம்மரங்களிலேயே மிகப் பெரிய மரத்தினருகில் தொழும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'அர்ஜ் எனும் ஊருக்குப் பின் புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் (உள்ள பள்ளிவாயிலில்) நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார். அர்ஜ் எனுமிடம் (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதையின் வலப்புறம் அமைந்துள்ள அப்பள்ளிவாயிலினருகில் கற்கள் நாட்டப்பட்ட இரண்டு மூன்று அடக்கத்தலங்கள் உள்ளன. அப்பாதையிலிருந்து பல கிளைப் பாதைகளும் பிரிகின்றன. அக்கிளைப் பாதைகளில் ஒன்றில் அர்ஜ் எனும் ஊருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அப்பள்ளி வாயிலில் சூரியன் சாய்ந்து நண்பகலானதும் லுஹர் தொழுவார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.

(மதீனாவிலிருந்து மக்கா) செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த 'ருவைஸா' எனும் சிற்றூருக்கு அரும்லுள்ள பெரிய மரத்தடியில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரினி எல்லையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளதுழூ அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில்தான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது இளைப்பாறுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
(மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில்) ரவ்ஹா எனுமிடம் உள்ளது. அவ்விடத்தில் ஒரு பள்ளிவாயில் இருக்கிறது. அப்பள்ளியிலிருந்து பாதையோரமாகப் பார்வை எட்டும் தொலைவின் இறுதியில் 'இரக்' எனும் பகுதி உள்ளது. அப்பகுதியில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அந்த இடத்தில் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பள்ளியில் இப்னு உமர்(ரலி) தொழுவதில்லை. தம் இடது புறத்தில் அந்தப் பள்ளிவாசல் இருக்குமாறும் அந்தப் பள்ளியை விட சற்று முன்னால் நின்றும் தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இடத்தில் தொழுததால் இப்னு உமர்(ரலி) அவ்வாறு தொழுவார்கள்.
'ரவ்ஹா' எனும் இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு (மக்காவுக்கு) வரும்போது இரக்கை அடையுமுன் லுஹா தொழ மாட்டார்கள். இரக்குக்கு வந்து லுஹர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதினாவுக்குத்) திரும்பி வரும்போது ஸுபுஹுக்குச் சற்று முன்னதாக, அல்லது ஸஹர் நேரத்தின் கடைசியில் இரக்கைக் கடக்க நேர்ந்தால் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு ஸுபுஹ் தொழுவார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் ஷரபுர்ரவ்ஹா எனும் இடத்திலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அரும்லுள்ள சின்னப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் தொழுதிருக்கிறார்கள்.' என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறிவிட்டு, அந்த இடத்தை அடையாளம் கூறும்போது '(நீ மதீனாவிலிருந்து) மக்கா செல்லும வழியில் பாதையின் வலப்புறம் அமைந்த பெரிய பள்ளியில் நீ கிப்லா பக்கம் நோக்கி நின்றால் அந்த இடம், உன் வலப்புறத்தில் இருக்கும். அந்த இடத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்திற்கும் தூரம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது 'துலஹுலைஃபா'வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் செல்லும்போது 'பத்னுல்வாதீ' என்ற பள்ளத்தாக்கு வழியாகப் புறப்பட்டு வந்து அந்தப் பள்ளதாக்கின் மேற்குப் புறஓரத்தில் ஒட்டகையைப் படுக்கச் செய்து ஸுபுஹ் வரை ஓய்வெடுப்பார்கள். ஓய்வெடுக்கும் அந்த இடம் பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலும் இல்லை; பள்ளியின் அரும்லுள்ள மணற்குன்றுமில்லை என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்கள்.
அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அதன் உட்புறத்தில் மணற் திட்டு இருந்தது. அங்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். தற்போது அந்தப் பள்ளத்திற்கு அருகிலிருந்த மணல் மேட்டைத் தண்ணீர் அரித்துக் கொண்டு வந்ததால் அது மூடப்பட்டுவிட்டது.


தொழுகை

மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.
ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் பாதையோரத்தில் அமைந்த சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே தொழுவார்கள். தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவ்விடங்களில் தொழுததாகவும் அவ்விடங்களில் நபி(ஸல்) தொழுததை அவரின் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள். இப்னு உமர்(ரலி) அவ்விடங்களில் தொழுததாக நாஃபிவு அவர்களும் என்னிடம கூறினார். ஸாலிம், நாஃபிவு இருவரும் அனைத்து இடங்களைப் பற்றியும் ஒரே கருத்தைக் கூறினார்கள் என்றாலும் அவ்விருவரும் ஷரஃபுர் ரவ்ஹா என்று இடத்தில் அமைந்த பள்ளி விஷயத்தில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்கள்.

தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக் காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(ரலி), உம்ர்(ரலி) ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை" என்று நபி(ஸல்) கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா?' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள்.
(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார்.


தொழுகை

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
"ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்" என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.


தொழுகை

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கோர்த்துக் காட்டி) 'அப்துல்லாஹ் இப்னு அம்ரே! மக்களில் மகாமட்டமானவர்களுடன் இப்படி நீ வாழ நேர்ந்தால் உன் நிலை என்னாகும்?' என்று கேட்டார்கள்.

தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைவிரல்களையும் கோர்த்தார்கள்.

தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கை விரல்களையும் கோர்த்தார்கள்.



தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் தாய் தந்தையர் எனக்கு விபரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் இருந்ததில்லை. பின்னர் ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூ பக்ரு அவர்களுக்குத் தோன்றியபோது தம் வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினாக்hள். அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக் கொண்டுமிருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும் குழந்தைகளும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூ பக்ரு மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும்போது அவரால் தம் கண்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.


தொழுகை


அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.
உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்பவர்களாக இருந்ததை ஸயீத் இப்னு அல்முஸய்யப் குறிப்பிடுகிறார்.

தொழுகை

அபூ வாகித் அல்லைஸீ அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது மூன்று நபர்கள் வந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். ஒருவர் சென்றார். அந்த இருவரில் ஒருவர் (சபையில்) சிறிது இடைவெளியைக் கண்டு அங்கே உட்கார்ந்தார். மற்றவர் சபையினரின் பின்னால் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் (சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி) முடித்தபோது, 'அந்த மூவரைப் பற்றியும் நான் உங்களுக்குக் கூறட்டுமா?' என்று கேட்டுவிட்டு 'ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கினார்; அல்லாஹ்வும் அவரை நெருக்கமாக ஆக்கிக் கொண்டான். மற்றவர் வெட்கப் பட்டார்; அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் வெட்கப் பட்டான் (அதாவது அவரைக் கருணைக் கண் கொண்டு பார்க்கவில்லை) இன்னொருவரோ அலட்சியமாகச் சென்றார்) அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்துவிட்டான்" என்று கூறினார்கள்.


தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 'இரவுத் தொழுகை எவ்வாறு?' என்று ஒருவர் கேட்டார். 'இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (தொழ முடியாத என்று) அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். நீர் தொழுதது உமக்கு வித்ராக அமையும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது 'இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். 'இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால்ய ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள்.


தொழுகை

கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.


தொழுகை

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) நின்றிருந்தார்கள். 'நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!" என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்க, 'நாங்கள் தாயிஃப் வாசிகள்' என்று அவர்கள் கூறினர். 'அல்லாஹ்வின் தூதருடைய பள்ளி வாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்' என்று உமர்(ரலி) கூறினார்.


தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'நஜ்து' பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள்.


தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்தபோது (கஅபாவின் சாவியை வைத்திருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி)வை அழைத்தனர். அவர் (கஅபாவின்) வாசலைத் திறந்தார். நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி), உஸாமாபின் ஸைத்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் (உள்ளே) சென்று கதவை மூடிவிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தனர். நான்விரைந்து சென்று பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அதில் தொழுதார்களா? என்று கேட்டேன். 'தொழுதார்கள்' என்று பிலால் கூறினார். எந்த இடத்தில்? என்று கேட்டதற்கு 'இரண்டு தூண்களுக்கிடையே' என்று கூறினா. எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்கத் தவறி விட்டேன்.


தொழுகை

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு 'தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!" என்று கூறினார்கள்.


தொழுகை

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் 'அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்" என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். 'இந்த மதுஹகூழ் ஏன் அழகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?' என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்."


தொழுகை

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பள்ளிவாசலைவிட்டும்) இருள் சூழ்ந்த இரவில் (தங்கள் இல்லங்களுக்கு) புறப்பட்டார்கள். அவ்விருவருக்கும் முன்னால் இரண்டு விளக்குகள் போன்று எதுவோ ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அவ்விருவரும் தத்தம் வழியில் பிரிந்து சென்ற போது) ஒவ்வொருவருடனும் விளக்குபோன்ற ஒன்று அவர்கள் தம் இல்லங்களை அடையும் வரை ஒளி வீசிக் கொண்டிருந்தது.


தொழுகை

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
என் உடல் நலக்குறைவு பற்றி நபி(ஸல்) அவர்களிடம நான் முறையிட்டபோது 'ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!" என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் ஒரு பகுதியில் 'தூர்' என்ற அத்தியாயத்தை ஓதித் தொழுது கொண்டிருந்தார்கள்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப் பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினருக்கு ஸஃதுடைய கூடாரத்திலிருந்து பாயும் இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. 'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?' என்று கேட்டக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஃது(ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள்.

தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'நஜ்து' பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து 'ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்!" என்றனர். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த குட்டைக்குச் சென்று குளித்தார். பின்னர் பள்ளிவாசலுக்கு வந்து 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று கூறினார்.


தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஓர் ஆண் அல்லது பெண்மணி பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்தார். அவர் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று மேற்கூறிய செய்தியை அபூ ஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள்.

தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.


தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். 'இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.


தொழுகை

கஃபு இப்னு மாலிக்9ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசல்லி வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃபே!" என்று கூப்பிட்டார்கள். 'இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'பாதி' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி 'உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!" என்று கூறினார்கள். 'அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின்தூதரே!' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் 'எழுவிராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என் உதவியை நாடினார். அதற்கு 'நீ விரும்பினால் உன் எஜமானருக்குரியதை நானே கொடுத்து விடுகிறேன் (உன் மரணத்திற்குப் பின் வாரிசாவது போன்ற) உரிமை எனக்கு வர வேண்டும்' என்று கூறினேன்.
ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம 'நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதைத்தந்து (நீங்கள் விடுதலை செய்து) கொள்ளலாம். ஆனால் உரிமை எங்களுக்கு வர வேண்டும்' என்று கூறினார்கள்.
இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது 'நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு! விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு" என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன வந்துவிட்டது?' அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவர், நூறு முறை அந்த நிபந்தனையை வலியுறுத்தினாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை' என்று கூறினார்கள்.

தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபீ ஸீனியர்கள் தங்கள் ஈட்டிகளின் மூலம் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதனருகில் நபி(ஸல்) அவர்கள் இருக்க பார்த்திருக்கிறேன்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபூ ஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தொழுகை

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார்.
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் 'அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். நபியவர்கள், 'ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!" என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல்(அலை) மூலம் வலுப்படுத்துவாயாக!" என்றும் கூறியதை நீர் செவியுற்றீர் அல்லவா?' என்று கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) 'ஆம்' என்றனர்.


தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது."
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.


தொழுகை


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.

;;