தொழுகை
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு தொழுகை நடத்தினார்கள்! பிறகு மேடை மீது ஏறித் தொழுகையைப் பற்றியும் ருகூவும் பற்றியும் போதித்தார்கள். (உங்களை முன் புறமாக) நான் காண்பது போன்றே என்னுடைய பின்புறமாகவும் உங்களைக் காணுகிறேன்" என்று கூறினார்கள்.
தொழுகை
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் nரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழுகை
அனஸ்(ரலி) அறிவித்தார்.
ம்ப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். 'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறு பகுதியுடன் கசக்கிவிட்டு 'அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
தொழுகை
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழலாகாது. ஏனெனில் அவர் தொழுது கொண்டிருக்கும் வரை தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அது போல்) தம் வலப்புறமும் உமிழலாகாது. ஏனெனில் அவரின் வலப்புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். தம் இடப்புறம் உமிழட்டும். அல்லது தம் பாதங்களுக்கடியில் உமிழ்ந்து அதை மண்ணுக்கடியில் மறைக்கட்டும்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்."
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
தொழுகை
அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் 'உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
தொழுகை
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"நிச்சயமாக ஒரு இறைநம்பிக்கையாளர் தொழுகையில் இருக்கும்போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே தங்களின் முன்புறமோ வலப்புறமோ அவர் உமிழ வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
தொழுகை
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"தமக்கு முன் புறமோ தம் வலப் புறமோ உங்களில் எவரும் உமிழலாகாது. எனினும் தம் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
தொழுகை
ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் 'உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துககு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
தொழுகை
அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் 'உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
;;
Subscribe to:
Posts (Atom)

