தொழுகை
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஓர் ஆண் அல்லது பெண்மணி பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்தார். அவர் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று மேற்கூறிய செய்தியை அபூ ஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள்.
தொழுகை
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
தொழுகை
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். 'இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.
தொழுகை
கஃபு இப்னு மாலிக்9ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசல்லி வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃபே!" என்று கூப்பிட்டார்கள். 'இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'பாதி' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி 'உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!" என்று கூறினார்கள். 'அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின்தூதரே!' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் 'எழுவிராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
தொழுகை
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என் உதவியை நாடினார். அதற்கு 'நீ விரும்பினால் உன் எஜமானருக்குரியதை நானே கொடுத்து விடுகிறேன் (உன் மரணத்திற்குப் பின் வாரிசாவது போன்ற) உரிமை எனக்கு வர வேண்டும்' என்று கூறினேன்.
ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம 'நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதைத்தந்து (நீங்கள் விடுதலை செய்து) கொள்ளலாம். ஆனால் உரிமை எங்களுக்கு வர வேண்டும்' என்று கூறினார்கள்.
இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது 'நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு! விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு" என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன வந்துவிட்டது?' அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவர், நூறு முறை அந்த நிபந்தனையை வலியுறுத்தினாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை' என்று கூறினார்கள்.
தொழுகை
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபீ ஸீனியர்கள் தங்கள் ஈட்டிகளின் மூலம் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதனருகில் நபி(ஸல்) அவர்கள் இருக்க பார்த்திருக்கிறேன்.
தொழுகை
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபூ ஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தொழுகை
அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார்.
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் 'அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். நபியவர்கள், 'ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!" என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல்(அலை) மூலம் வலுப்படுத்துவாயாக!" என்றும் கூறியதை நீர் செவியுற்றீர் அல்லவா?' என்று கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) 'ஆம்' என்றனர்.
தொழுகை
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது."
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
தொழுகை
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.
;;
Subscribe to:
Posts (Atom)

