தொழுகை
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என் உதவியை நாடினார். அதற்கு 'நீ விரும்பினால் உன் எஜமானருக்குரியதை நானே கொடுத்து விடுகிறேன் (உன் மரணத்திற்குப் பின் வாரிசாவது போன்ற) உரிமை எனக்கு வர வேண்டும்' என்று கூறினேன்.
ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம 'நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதைத்தந்து (நீங்கள் விடுதலை செய்து) கொள்ளலாம். ஆனால் உரிமை எங்களுக்கு வர வேண்டும்' என்று கூறினார்கள்.
இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது 'நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு! விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு" என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன வந்துவிட்டது?' அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவர், நூறு முறை அந்த நிபந்தனையை வலியுறுத்தினாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை' என்று கூறினார்கள்.