தொழுகை
கஃபு இப்னு மாலிக்9ரலி) அறிவித்தார்.
இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசல்லி வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃபே!" என்று கூப்பிட்டார்கள். 'இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'பாதி' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி 'உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!" என்று கூறினார்கள். 'அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின்தூதரே!' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் 'எழுவிராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.