"கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித உள்ளத்தில் உதித்திராத ஒன்றை என் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்துள்ளேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் விரும்பினால் 32:17 வசனத்தைப் படித்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்தில் ஒரு மரம் உண்டு. 100 வருடம் ஆனாலும் விலகாத அதன் நிழலில் ஒருவர் இளைப்பாறுவார். நீங்கள் விரும்பினால் 56:30 வசனத்தைப் படியுங்கள்.