தொழுகை
'ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு மூட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏறபட்டுவிட்டது. ஒரு மாத காலம் தங்களின் மனைவியரிடம் செல்வதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். பேரீச்ச மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களின் தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்தபோது (அந்தப்பரணியில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். வந்தவர்கள் நின்று தொழுதார்கள். ஸலாம் கொடுத்த பின்னர் நபி(ஸல்) அவர்கள் 'பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் சொல்லுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்' எனக் கூறினார்கள். நாள்கள் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் அந்தப் பரணிலிருந்து இறங்கினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே!' எனத் தோழர்கள் கேட்டபோது 'இந்த மாதம் இருபத்தி ஒன்பது நாள்கள் தாம்' என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.