ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம்/ அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்தை)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே/ நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் தோழர்களை நோக்கி/ "(அவரை தண்டிக்க வேண்டாம்.) விட்டு விடுஙகள். ஏனெனில்/ ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாஙகி அவரிடமே கொடுத்து விடுஙகள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள்/ அவருக்குத் தர வேண்டியது ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எஙகளிடம் இருக்கின்றது என்று கூறினார்கள். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்/ அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில்/ உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உஙகளில் சிறந்தவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ)