நபிமொழி 11

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், உ(க்)காழ், எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச் செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள்" உங்களுக்கு என்ன நேர்ந்தது,, என்று கேட்டனர். ஷைத்தான்கள் "வானத்துச் செய்திகளுக்கும் எஙகளுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது, எஙகள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன" என்று பதிலளித்தனர். "புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உஙகளுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீஙகள் பூமியின் கீழ்த்திசை மேல்திசை (என நாலா பாகஙகளிலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுஙகள்" என்றனர். அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்தபோது/, உகாழ், சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நக்லா, எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனஙகளை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தஙகளுக்கிடையில்) "அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உஙகளைத் தடுத்தது இது தான்" என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாஙகள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாஙகள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம்,, என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு, "நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..." என்று தொடஙகும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி , வஹி,யின் மூலம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ராளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீஹதீஸ் எண் : 0773)