நபிமொழி 23

''ஞானத்தை எனக்கு அதிகமாக்கு என்று (நபியே!) நீர் கூறும்!'' (திருக்குர்ஆன் 20:114) என்ற இறைவசனம்.

ஹதீஸ் துறை அறிஞர் ஒருவரிடம் (பயிலும் மாணவர்கள் ஹதீஸ்களை) படித்துக்காட்டுவது; எடுத்துச் சொல்வது.

ஹஸன் (அல் பஸரி), ஸுஃப்யான் (அஸ்ஸவ்ரீ), மாலிக் (இப்னு அனஸ்) ஆகியோர் இவ்வாறு படித்துக் காட்டுவதன் மூலம் ஆசிரியரின் அங்கீகாரம் பெறுவதை அனுமதிக்கப்பட்ட முறையாகக் கருதுகிறார்கள்.

ளிமாம் இப்னு ஸஃலபா ரளியல்லாஹு அன்ஹு ,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'நாங்கள் (ஐந்து வேளைத்) தொழுது வர வேண்டும் என அல்லாஹ்வா தாங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்?' எனக் கேட்டார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஆம்!'' என்றார்கள். தம் கூட்டத்தினருக்கு அதை ளிமாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததும் அவர்கள் அனைவரும் (அவர் கூறியவற்றை) ஏற்றார்கள்.

எனவே இது, ஆசியரிடம் மாணவர் படித்துக்காட்டும் முறையாகும். (இம்முறையைக் கடைபிடிக்க) ளிமாம் இப்னு ஸஃலபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸையே சிலர் ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி

அவர்கள் இதற்கு மற்றொரு சான்றை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அதாவது எழுதப்பட்ட படிவம் மக்களிடம் வாசித்துக் காட்டப்படும். அதனை முழுவதுமாகக் கேட்டு அவர்கள் இன்னார் எங்களுக்கு அங்கீகாரம் அளித்தார் எனக் கூறுவார்கள். மேலும் (சில சமயம்) அவர்களிடம் அது (மனனமாகவும்) சொல்லிக் காட்டப்படும். கற்றுக் கொடுத்தவரிடமும் அது சொல்லி காட்டப்படும் (இவைகளெல்லாம் கற்றவருக்குரிய சான்றுகளாகக் கருதப்பட்டதால்) கற்றவர் மற்றவர்களிடம் எனக்கு இன்னார் கற்றுத் தந்தார் என்றே கூறுவார்கள். இந்த மரபை இமாம் மாலிக் அவர்கள் ஆதாரமாகவும் தம் கருத்துக்குச் சான்றாகக் கொள்கிறார்கள்.

ஒரு நபிமொழி அறிஞரிடம் (மாணவர்) படித்துக் காட்டுவதன் மூலம் அங்கீகாரம் பெறுவது குற்றமில்லை என ஹஸன் (அல்பஸரீ) அவர்கள் கூறினார்கள்.

நபிமொழித் துறை வல்லுனரிடம் மாணவர் ஒருவரால் நபிமொழிகள் படித்துக் காண்பிக்கப்பட்டு (அவரின் அங்கீகாரம் பெற்று)விட்டால், அவர் எனக்கு (இதை) அறிவித்தார் என்று (அம்மாணவர்) கூறுவது குற்றமில்லை என ஸுஃப்யான் (அஸ்ஸவ்ரி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நபிமொழித் துறை அறிஞரிடம் (மாணவர்) படித்துக் காட்டு(வதன் மூலம் ஆசிரியரிடம் அங்கீகாரம் பெறு)வதும் அந்த அறிஞர் (மாணவருக்கு) படித்துக் காட்டு(வதன் மூலம் அங்கீகாரம் தரு)வதும் சமம்தான் என ஸுஃப்யான் (அஸ்ஸவ்ரி) இமாம் மாலிக் ஆகியோர் கூறினார்கள்கள் என அறிவிக்கப்படுகிறது.

63ஃ61. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார்.

பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம்.

உடனே அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது' என்றார்.

அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையம் உமக்கு முன்னிருந்தோரதும இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார்.

அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள்.

அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள்.

அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள்.

உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூஸஃது இப்னு பக்ர் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி)