"நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீத மிருந்ததை உமர் இப்னு கத்தாப் (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார். (நூல்: புகாரி)