ஈமான் எனும் இறைநம்பிக்கை
நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, 'ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்" என ஜுபைத் அறிவித்தார். (குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர்.