கல்வியின் சிறப்பு
மக்களே! உங்கள் உயிர்களும், உடைமைகளும் உங்களின் இந்தப் புனித மாதத்தில் இந்த நாளின் புனிதத்தைப் போன்று உங்களின் மீது புனிதமானவையாய் இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். உங்களில் இங்கே வருகை தந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு (இச்செய்தியைச்) சமர்ப்பித்து விடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறுதி ஹஜ்ஜின்போது ஆற்றிய பேருரையில்) கூறினார்கள்" என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். அபூ பக்ராவின் மகனிடமிருந்து இச்செய்தியைக் கேட்ட முஹம்மத் இப்னு ஸீரீன் '(உங்கள் உடைமைகளும் என்பதற்கடுத்து) 'உங்கள் மானமரியாதைகளும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்" என்றார். 'இறைத்தூதர் உண்மையே கூறினார்கள். அவர்களின் அந்த உரையில் 'நான் (எனக்கு அறிவிக்கப்பட செய்தியைச்) சமர்ப்பித்து விட்டேனா?' என்று இரண்டு முறை மக்களைப் பார்த்துக் கேட்டதும் அடங்கியிருந்தது" என்றும் குறிப்பிட்டார்கள்.