கல்வியின் சிறப்பு
ஆயிஷா(ரலி) உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன தகவல் சொல்லியிருக்கிறார்கள்?' என என்னிடம் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கேட்டார்கள். 'ஆயிஷாவே! உம்முடைய சமூகத்தார்க(ளான குறைஷிக)ள் குஃப்ரைவிட்டு (இஸ்லாத்திற்கு வந்த) காலம் மட்டும் சமீபத்தியதாக இல்லாமலிருந்தால் நான் கஅபாவை இடித்துவிட்டு அதனை மக்கள் உன்னே நுழைவதற்கு ஒரு வாசலும் வெளியேறுவதற்கு விசாலமாக வேறொரு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார்' என்றேன்" அஸ்வத் அறிவித்தார். இப்னு ஸுபைரின் ஆட்சிக் காலத்தில் கஅபாவிற்கு இரண்டு வாசல்கள் அமைத்து அதனைச் செய்து காட்டினார்கள்.