நபி(ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ரத் என்ற இடத்தில் கேள்வி கேட்கப்பட்டதை கண்டேன். அப்போது ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! நான் (கல்) எறிவதற்கு முன்பே (பிராணியைப்) பலியிட்டு விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'குற்றமில்லை; இப்போது கல்லெறிந்து விடும்" என்றார்கள். மற்றொருவர் 'இறைத்தூதர் அவர்களே! நான் பிராணியைப் பலியிடுவதற்கு முன்பே மொட்டையடித்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள், 'அதனால் குற்றமில்லை; பலியிட்டுவிடும்" என்றார்கள். (இது போன்ற செயல்களை) முந்தியோ பிந்தியோ செய்யப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் 'குற்றமில்லை; இப்போது செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.கல்வியின் சிறப்பு