கல்வியின் சிறப்பு
நபி(ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்' என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்" என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(இந்த நபிமொழி அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்: எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா அவர்களிடம், 'அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்' என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் 'அனஸ்(ரலி) தாம் கூறினார்கள்' என்றார்.