கல்வியின் சிறப்பு

இப்னு அப்பாஸுக்கும் மக்களுக்குமிடையில் நான் மொழிபெயர்க்கக் கூடியவனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்துல் கைஸின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தபோது 'வந்திருக்கும் இம்மக்கள் யார்?' அல்லது 'வந்திருக்கும் இவ்வம்சத்தினர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு 'அவர்கள் 'ரபீஆ' வம்சத்தினர்' என்றார்கள். '(தாமாக இஸ்லாத்தை ஏற்க வந்துவிட்டதால்) இழிவுபடுத்தப்படாத நிலையிலும் பின்னர் வருந்தாத நிலையிலும் இம்மக்களின் அல்லது இத்தூதுக்குழுவினரின் வருகை - நல்வகையாகுக!' என்று நபி(ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறினார்கள். அப்போது அம்மக்கள் 'நாங்கள் மிக தூரமான ஊரிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் இது வரை இஸ்லாத்தை ஏற்காதவர்களான 'முளர்' கூட்டத்தினர் குறுக்கே வாழ்கிறார்கள். எனவே யுத்தம் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களிலேயே தவிர (வேறு மாதங்களில்) தங்களைச் சந்திக்க வர முடியாது. எனவே சில விஷயங்களை எங்களுக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் (இங்கே வராமல்) எங்களுக்குப் பின்னே தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்கள் (இங்கே வராமல்) எங்களுக்குப் பின்னே தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்கள் சுவர்க்கமும் செல்வோம்' என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களை ஏவினார்கள்; நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, 'அல்லாஹ் ஒருவனையே நம்புவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்றார்கள். அதற்கு 'வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புவது; தொழுகையை நிலை நிறுத்துவது; ஸகாத் வழங்குவது; ரமலான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கி விடுவது ஆகிய இவையே ஈமான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் (மது வைத்திருந்த) சுரைக் குடுக்கைகள், மண்ஜாடிகள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்களுக்குத் தடை விதித்தார்கள். (இத்தடை பின்னர் நீக்கப்பட்டது) 'இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு (இங்கே வராமல்) உங்கள் பின்னே (உங்களை எதிர்பார்த்து) இருப்போரிடம் சென்று அறிவித்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஜம்ரா அறிவித்தார். "ஒரு வேளை 'பேரீச்சை மரத்தின் அடி மரத்தைக் குடைந்து தயாரித்த மரப் பீப்பாய்கள்' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்" என ஷுஅபா கூறினார்.