ஈமான் எனும் இறைநம்பிக்கை

'நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னா, 'நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனுமாவேன்" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.