தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'அர்ஜ் எனும் ஊருக்குப் பின் புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் (உள்ள பள்ளிவாயிலில்) நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார். அர்ஜ் எனுமிடம் (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதையின் வலப்புறம் அமைந்துள்ள அப்பள்ளிவாயிலினருகில் கற்கள் நாட்டப்பட்ட இரண்டு மூன்று அடக்கத்தலங்கள் உள்ளன. அப்பாதையிலிருந்து பல கிளைப் பாதைகளும் பிரிகின்றன. அக்கிளைப் பாதைகளில் ஒன்றில் அர்ஜ் எனும் ஊருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அப்பள்ளி வாயிலில் சூரியன் சாய்ந்து நண்பகலானதும் லுஹர் தொழுவார்கள்.