மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும் 2:45
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் மற்றொரு சிறுவரும் கைத்தடியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள் தம் தேவையை முடித்ததும் (உளூச் செய்வதற்காக) தண்ணீர் ஊற்றுவோம்.