தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது 'துலஹுலைஃபா'வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் செல்லும்போது 'பத்னுல்வாதீ' என்ற பள்ளத்தாக்கு வழியாகப் புறப்பட்டு வந்து அந்தப் பள்ளதாக்கின் மேற்குப் புறஓரத்தில் ஒட்டகையைப் படுக்கச் செய்து ஸுபுஹ் வரை ஓய்வெடுப்பார்கள். ஓய்வெடுக்கும் அந்த இடம் பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலும் இல்லை; பள்ளியின் அரும்லுள்ள மணற்குன்றுமில்லை என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்கள்.
அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அதன் உட்புறத்தில் மணற் திட்டு இருந்தது. அங்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். தற்போது அந்தப் பள்ளத்திற்கு அருகிலிருந்த மணல் மேட்டைத் தண்ணீர் அரித்துக் கொண்டு வந்ததால் அது மூடப்பட்டுவிட்டது.