தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
(மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில்) ரவ்ஹா எனுமிடம் உள்ளது. அவ்விடத்தில் ஒரு பள்ளிவாயில் இருக்கிறது. அப்பள்ளியிலிருந்து பாதையோரமாகப் பார்வை எட்டும் தொலைவின் இறுதியில் 'இரக்' எனும் பகுதி உள்ளது. அப்பகுதியில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அந்த இடத்தில் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பள்ளியில் இப்னு உமர்(ரலி) தொழுவதில்லை. தம் இடது புறத்தில் அந்தப் பள்ளிவாசல் இருக்குமாறும் அந்தப் பள்ளியை விட சற்று முன்னால் நின்றும் தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இடத்தில் தொழுததால் இப்னு உமர்(ரலி) அவ்வாறு தொழுவார்கள்.
'ரவ்ஹா' எனும் இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு (மக்காவுக்கு) வரும்போது இரக்கை அடையுமுன் லுஹா தொழ மாட்டார்கள். இரக்குக்கு வந்து லுஹர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதினாவுக்குத்) திரும்பி வரும்போது ஸுபுஹுக்குச் சற்று முன்னதாக, அல்லது ஸஹர் நேரத்தின் கடைசியில் இரக்கைக் கடக்க நேர்ந்தால் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு ஸுபுஹ் தொழுவார்கள்.