தொழுகை

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) நின்றிருந்தார்கள். 'நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!" என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்க, 'நாங்கள் தாயிஃப் வாசிகள்' என்று அவர்கள் கூறினர். 'அல்லாஹ்வின் தூதருடைய பள்ளி வாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்' என்று உமர்(ரலி) கூறினார்.