தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப் பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினருக்கு ஸஃதுடைய கூடாரத்திலிருந்து பாயும் இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. 'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?' என்று கேட்டக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஃது(ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள்.