தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் தாய் தந்தையர் எனக்கு விபரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் இருந்ததில்லை. பின்னர் ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூ பக்ரு அவர்களுக்குத் தோன்றியபோது தம் வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினாக்hள். அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக் கொண்டுமிருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும் குழந்தைகளும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூ பக்ரு மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும்போது அவரால் தம் கண்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.